• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத சூழலில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றுவருகின்றது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில், தற்போது ஆன்லைன் கல்வியால் ஏற்படும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதனையடுத்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தரப்பில் ஆன்லைன் கல்விக்கான மேலும் சில வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்பிற்கு நடுவே போதிய இடைவேளை விட வேண்டும். மாணவர்களுடன் ஆசிரியர்கள் தக்க புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ஆன்லைன் வகுப்புகள் சுட்டிக்காட்டி மாணவர்களுக்கு வருகை பதிவேடு மேற்கொள்வது கற்றலில் உள்ள திறன் மதிப்பீடு செய்வது ஆகியவற்றை மேற்கொள்ள கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கல்விக்கான இணைய வசதிகள் இல்லாத மாணவர்களை அத்தகைய வசதிகள் ஏற்படும் வரை ஆன்லைன் வகுப்பில் பங்கேற்குமாறு கட்டாயப்படுத்துதல் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆன்லைன் கல்விக்கு மாணவர்களை கட்டாயப்படுத்துதல் தொடர்ந்தால் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் ஏற்ப்படுத்தப்பட்டுள்ள grievancesredressal@tnpta@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியில் புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் கல்வியாளர்கள் ஆன்லைன் கல்வியே கூடாது என்று தற்போதைய நிலையில் கூற முடியாது என்பதால் மாணவர்கள், பெற்றோர்களுடன் பள்ளிகள் கலந்து பேசி அதற்கேற்ப மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையினை முன்வைக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: