• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சுகாதார தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 40,000 மாணவர்கள்... விழிப்புணர்வு வீடியோ மூலம் தூய்மைப் பணி

சுகாதார தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 40,000 மாணவர்கள்... விழிப்புணர்வு வீடியோ மூலம் தூய்மைப் பணி

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையின் சுகாதார தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள மாநகராட்சி பள்ளி மாணவிகள், விழிப்புணர்வு விளம்பரம் மூலம் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் 40 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு சுகாதார தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான, உத்தரவை கடந்த செப்டம்பர் 6-ம் தேதி தமிழக அரசு வெளியிட்டது.

    அதனை தொடர்ந்து செனாய் நகரில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் பயிலும் சசிகலா, நவ்யா ஸ்ரீ, நந்திதா ஆகிய 3 மாணவிகள் மூலம் சுகாதார விழிப்புணர்வு பிரச்சார விளம்பரமும் வெளியிடப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    சுகாதார விழிப்புணர்வு பிரசாரம் மூலம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக மாணவி சசிகலா தெரிவித்தார்.

    இம்மாத இறுதியில் லண்டனில் நடைபெறவுள்ள சுகாதாரம் குறித்த மாநாட்டில் பேசுவதற்காக மாணவி நவ்யஸ்ரீ தேர்வாகியுள்ளார். சுகாதார விழிப்புணர்வு வீடியோவால், தங்களின் கருத்துக்களை கேட்டு அதன்படி செயல்பட மக்கள் முன்வருவதாக கூறியுள்ளார்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டால் தான் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவுவதாகவும், அவற்றை குறைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் மாணவி நந்திதா தெரிவித்துள்ளார்.

    விரைவில் 20 ஆயிரம் சுகாதார தூதுவர்கள் ஒன்றாக இணைந்து சென்னையில் மாபெரும் பிரசார பேரணியை முன்னெடுக்க உள்ளதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். சுற்றப்புற சுகாதாரத்தை பேண ஒவ்வொருவரும் முயற்சித்தால், சென்னை தூய்மை நகரமாக மாறும் என்றும் கூறியுள்ளனர்.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: