கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரி சூறையாடல்.. திமுக பிரமுகர் உட்பட 8 பேர் மீது வழக்கு

Youtube Video

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் இயங்கும் கல்குவாரிக்கு இடங்களை கொடுக்க மறுத்த கல்லூரி தாளாரை தாக்கிய கும்பல் நள்ளிரவு நேரத்தில் பள்ளி, கல்லூரிக்குள் அதிரடியாக புகுந்து பொருட்களை உடைத்து சேதப்படுத்திய பகீர் சம்பவம் நடந்துள்ளது. திமுக பஞ்சாயத்து தலைவர் உட்பட எட்டுபேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நடந்தது என்ன?

 • Share this:
  கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த மாமூட்டுகடை பகுதியை சேர்தவர் பிரான்சிஸ். இவர் அதே பகுதியில் ஆர்.பி.ஏ என்ற பெயரில் பள்ளி,கல்லூரிகள் ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றார். பிரான்ஸூசின் கல்லூரி வளாகத்திற்கு பின்புறமாக விரிகோட்டை பகுதியை சேர்ந்த ரியல்எஸ்டேட் அதிபர் ஆனந்தராஜன் சட்டவிரோதமாக கல்குவாரியை நடந்தி வருவதாக தெரிகின்றது. ஆனந்தராஜூன் கல்குவாரிக்கு லாரிகள் செல்ல வழியில்லாததால் நள்ளிரவுநேரத்தில் கல்லூரி கதவுகளை உடைத்து கல்லூரி வழியாக லாரிகளை இயக்கி பாறைகற்களை கடத்தி வந்துள்ளனர்.

  லாரிகள் அத்துமீறி கல்லூரி வழியாக செல்வது தொடர்பாக பிரான்சிஸ் ஆனந்தராஜூடம் கேட்டுள்ளார். அப்படிதான் லாரிகள் செல்லும் உன்னால் செய்ய முடிந்ததை செய்துகொள் என்று மிரட்டியுள்ளார். செய்வதறியாத தாளாளர் பிரான்சிஸ் கல்லூரியின் கதவுகளை பலமாக மாற்றியுள்ளார்.

  இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தராஜ் பிரான்சிசை தனது அடியாட்களுடன் வந்து கடந்த 16 கடுமையாக தாக்கியுள்ளார். இதில் கடுமையான காயமடைந்த பிரான்சிஸ் சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார்.

  இந்நிலையில், புதன்கிழமையன்று இரவு பிரான்சிஸ் கல்லூரி வளாகத்தில் நடக்கும் கட்டிடப்பணிகளை கவணித்து வந்துள்ளார். இரவு பதினொருமணிக்கு திடீரென கல்லூரி வளாகத்திற்கு வந்த பத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கல்லூரியை அடித்து நொறுக்கி சூறையாடியது. அரிவாள், கட்டை, இரும்பு, கம்பி என கொலை ஆயுதங்களுடன் ஆவேசமாக வந்த கும்பல் சம்பவம் தொடர்பாக பிரான்சிஸ் கொடுத்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த மார்த்தாண்டம் போலீசார் ஆனந்தராஜன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த திமுக பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் மீது வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மேலும் படிக்க...தண்ணீர் தொட்டியில் விஷவாயு.. 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு..

  நிலஅபகரிப்பு கும்பல் தனியார்கல்லூரியில் புகுந்து சூறையாடிய சம்பவம் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  வீடியோ




  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: