வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று
சேலம்,
விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கும் 2 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் கனமழை காரணமாக தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மற்றும் ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Must Read : தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? ஆரஞ்சு அலர்ட்?
அதன்படி இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, நாமக்கல், வேலூர், தேனி, கரூர், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், திண்டுக்கல், விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோவை, திருப்பூர்,ராமநாதபுரம், திருச்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.