மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுதில் முறைகேடு? பள்ளிக்கல்வித்துறை அதிரடி

பள்ளிக் கல்வித்துறை

ஒரு சில மாநிலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறுவதாக சிறுபான்மை நலத் துறையின் இயக்குனர் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இணையதள சேவை மையங்கள் மற்றும் பள்ளிதலைமை ஆசிரியர்கள் இணைந்து ஒரே வங்கிக் கணக்கில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களைத் தேசிய கல்வி உதவித்தொகை பக்கத்தில் சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இதற்காக தகுதியான மாணவர்களின் விவரங்களை தேசிய உதவித்தொகை பக்கத்தில் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும்.

இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பிரத்யேகமாக இணைய முகவரி மற்றும் பாஸ்வேர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில மாநிலங்களில் தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மற்றும் பாஸ்வேர்டை தனியார் இணையதள மையங்களுக்கு வழங்கியதாகவும், அதன் மூலம் தனியார் மையங்கள் ஒரே வங்கி கணக்கு எண்களை கொடுத்து மாணவர்களை அதிக அளவில் தேசிய உதவித்தொகை பக்கத்தில் சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பள்ளி தலைமையாசிரியர்கள் உதவித் தொகைக்காக விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை மறுஆய்வு செய்து நாளை மாலைக்குள் பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Also read... அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் - தமிழக அரசு

மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை பெறுவதில் தனியார் இணையதள மையங்களுடன் பள்ளி தலைமை ஆசிரியர்களும் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒரு சில மாநிலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறுவதாக சிறுபான்மை நலத் துறையின் இயக்குனர் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: