ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக்கொள்ள வேண்டும்: கமல்ஹாசன்

கமல்ஹாசன்

குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம் என கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

 • Share this:
  ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக்கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  கொரோனா தொற்று 2வது அலை தமிழகத்தில் அதிகரித்து வந்ததை அடுத்து தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதை தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது.

  Also read: டாஸ்மாக் திறப்பு: தேனியில் மது வாங்க செல்லும் மதுப்பிரியர்களுக்கு காவல்துறை முக்கிய அறிவிப்பு!

  இதைத்தொடர்ந்து, ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் 14ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் தமிழக அரசின் முடிவுக்கு பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொரோனா 2-ம் அலையின் தீவிரம் குறைவதற்கு முன்பாக மதுபானக் கடைகளைத் திறப்பது தொற்றுப் பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், டாஸ்மாக்கை திறக்கக்கூடாது எனத் தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

  அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: