பல்கலைக்கழகங்களில் முறைகேடா ? தமிழக அரசு அதிரடி உத்தரவு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

சேலம் பெரியார் ,மதுரை காமராசர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
சேலம் பெரியார் பல்கலைக் கழகம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியர் மற்றும் நிர்வாக ரீதியில் நடைபெற்ற பதவி உயர்வு களில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார்கள் தொடர்பாக விசாரணை செய்ய உயர்கல்வித்துறை குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அரசாணை வெளியிட்டுள்ளார் அதில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் கடந்த ஆண்டுகளில் தகுதியற்ற நபர்களுக்கு முறைகேடாக பதவி உயர்வுகள் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.  இதுகுறித்து தமிழக அரசு உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது உயர்கல்வித்துறை விசாரணை அலுவலர்களை  அமைத்து உத்தரவிட்டுள்ளது.

Also Read : சென்னையில் அதிரடி... சுவரொட்டிகளை சுரண்டி எடுக்கும் மாநகராட்சி

உயர் கல்வித்துறை துணை செயலாளர் சங்கீதா ஐ ஏ எஸ்  மற்றும் உயர்கல்வித் துறை இணை செயலாளர் இளங்கோ ஹென்றி தாமஸ் ஐ.ஏ.எஸ்  ஆகியோர் விசாரணை அலுவலர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக மூன்று மாத காலத்திற்குள் இந்த குழு தமிழக அரசிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் என்றும் தமிழக அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: