ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய பேரறிவாளனின் மனு மீது நவம்பர் 5ல் விசாரணை

ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய பேரறிவாளனின் மனு மீது நவம்பர் 5ல் விசாரணை
பேரறிவாளன்.
  • News18
  • Last Updated: October 17, 2019, 11:05 AM IST
  • Share this:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள, பேரறிவாளன் தனது ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நவம்பர் 5ல் விசாரிக்கிறது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழக ஆளுநரின் முடிவுக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறது.


இந்த நிலையில், பெல்ட் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பான சிபிஐ சிறப்புக்குழு விசாரணை இன்னும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன் அறிக்கையை பேரறிவாளன் தரப்பிற்கு கொடுக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்த்கரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக கூடுதல் பதில் அளிக்க சி.பி.ஐ மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கானது கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு வரும் நவம்பர் 5ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.அன்று வழக்கை கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு நீதிபதி ரமணா அமர்வில் இன்று முறையிட்டார்.

அதனை ஏற்ற நீதிபதி என்.வி.ரமணா, வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்படாது எனவும், நவம்பர் 5ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.

First published: October 17, 2019, 11:04 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading