தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வேண்டும் - தமிழக அரசு மனு தாக்கல்
தீபாவளியன்று காலை 4 மணி முதல் 6 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

- News18
- Last Updated: October 29, 2018, 2:29 PM IST
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் (காலை 4 - 6) ஒதுக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் பட்டாசு தொழிலை நம்பி சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 2 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர். சிவகாசியில் 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளும், 1000-கும் மேற்பட்ட பட்டாசு கடைகளும் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசுகட்டுபாட்டுக்கு காரணமாக உள்ள பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடைகோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடையில்லை என்று தீர்ப்பளித்தனர். எனினும் தீபாவளியின்போது, நாடு முழுவதும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். பட்டாசுகளை ஆன்லைன் முறையில் விற்பனை செய்வதற்கு தடைவிதித்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 
இந்நிலையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவை பலரும் எதிர்த்தனர். அதனால் தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க கோரி இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு அளித்த மனுவில் காலை 4 மணி முதல் 6 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
Also see...

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வேண்டும்
இந்நிலையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவை பலரும் எதிர்த்தனர். அதனால் தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க கோரி இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
#BREAKING | தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் (காலை 4 - 6) ஒதுக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு...https://t.co/3v5L32GOYJ pic.twitter.com/c1fjIKrULq
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 29, 2018