Home /News /tamil-nadu /

அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் தடை

அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் தடை

தனபால். (கோப்புப் படம்)

தனபால். (கோப்புப் படம்)

சபாநாயகர் தனபால் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவருக்கு சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் தடை  விதித்துள்ளது.

    கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி டிடிவி. தினகரன் ஆதரவாளர்களான கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய எம்எல்ஏக்கள் மீது, அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்தார்.



    இதற்கிடையே சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி, திமுக சார்பில் பேரவை செயலாளரிடம் மனு அளித்தனர்.

    இதன் அடுத்த கட்டமாக 3 எம்எல்ஏ-க்கள் மீதான நடவடிக்கைக்கு தடைகோரி, அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகரின் நோட்டீசுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.

    மேலும், சபாநாயகர் தனபால் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

    Published by:Sankar
    First published:

    Tags: ADMK, TN Assembly, TTV Dhinakaran

    அடுத்த செய்தி