Home /News /tamil-nadu /

SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட கொலை வழக்கு எத்தனை? நீதிமன்றம் கேள்வி

SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட கொலை வழக்கு எத்தனை? நீதிமன்றம் கேள்வி

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட த்தின்படி ஆதிதிராவிடர், பழங்குடியினர் விதிகளின் அடிப்படையில் விவசாய நிலம், வேலைவாய்ப்பு,  உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மனு

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆதிதிராவிடர்  மற்றும்  பழங்குடியினர்  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு விவசாய நிலம், வேலைவாய்ப்பு,  உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை,  3 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த தனபால், உயர்நீதிமன்றம்  மதுரைக் கிளையில்  தாக்கல் செய்த மனுவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட த்தின்படி,    கொலை, மரணம், பாலியல் பலாத்காரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர்,  பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு 3 மாதத்தில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மாதம் 4500 ரூபாய் நிவாரணத் தொகை, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை, வீட்டு மனை, பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி, மூன்று மாதங்களுக்கு வீட்டுக்கு தேவையான அரசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டப்படி பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கொலையானவர்களின் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, நிவாரண நிதி மட்டும் வழங்கியதாகவும், பிற நிவாரணங்களை வழங்கவில்லை எனத் தெரிவித்தனர். ஆகவே வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து,  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு    பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட த்தின்படி ஆதிதிராவிடர், பழங்குடியினர் விதிகளின் அடிப்படையில் விவசாய நிலம், வேலைவாய்ப்பு,  உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

ALSO READ | குழந்தைகளை கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை... நாமக்கல் நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு...
 இந்த பொது நல மனு, நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆதிதிராவிடர்  மற்றும்  பழங்குடியினர்  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதியப்பட்ட கொலை வழக்குகள் எத்தனை?அவர்களில் எத்தனை குடும்பத்தினருக்கு விவசாய நிலம், அரசு வேலைவாய்ப்பு, மாத உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது ?  என்பது குறித்து தமிழக உள்துறைச் செயலர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
Published by:Anupriyam K
First published:

Tags: High court, Madurai High Court, SC / ST Act

அடுத்த செய்தி