Home /News /tamil-nadu /

#Breaking | ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

#Breaking | ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை மிக மெதுவாக நடப்பதாக கூறி, வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்புக்காக திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணி மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக திறக்க அனுமதி வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை மிக மெதுவாக நடப்பதாக கூறி, மேற்கண்ட கோரிக்கையுடன் வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

    படிக்க... 22 ஆண்டு கால ஸ்டெர்லைட் ஆலை: மகாராஷ்டிரா முதல் தூத்துக்குடி வரை 

    இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏற்கனவே கழிவுகளை அகற்ற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, அது மட்டுமல்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் போது, அதனை மீறி உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாது.

    இனியும், இது போன்று வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதிகள் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர்.




    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Sankar
    First published:

    Tags: Sterlite issue

    அடுத்த செய்தி