ஜெயலலிதா - செங்கோட்டையன் மீதான பரிசுப்பொருள் வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

News18 Tamil
Updated: July 9, 2019, 7:30 PM IST
ஜெயலலிதா - செங்கோட்டையன் மீதான பரிசுப்பொருள் வழக்கை  தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
செங்கோட்டையன்
News18 Tamil
Updated: July 9, 2019, 7:30 PM IST
ஜெயலலிதா-செங்கோட்டையன் மீதான பரிசுப்பொருள் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சராக இருந்தபோது, கடந்த 1992-ஆம் ஆண்டு நடந்த அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் சர்ச்சைக்குள்ளானது.

ஜெயலலிதாவிற்கு வந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப்பொருட்கள் அரசு கருவூலத்தில் சேர்க்கப்படாமல், அவரது சொந்த வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக ஜெயலலிதா, தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்ததால், உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.

ஜெயலலிதா மற்றும் அழகு திருநாவுக்கரசு இறந்துவிட்டதால் அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

செங்கோட்டையன் மீதான வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், 23 ஆண்டு கால வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லையெனக் கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சிபிஐ போதிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை எனக் கூறியுள்ள உச்சநீதிமன்றம், செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.

 
First published: July 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...