லோக் ஆயுக்தா விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லோக் ஆயுக்தா அமைப்பை இறுதியை செய்ய 4 வாரமும் இறுதி அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Web Desk | news18
Updated: February 11, 2019, 2:06 PM IST
லோக் ஆயுக்தா விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
உச்ச நீதிமன்றம்
Web Desk | news18
Updated: February 11, 2019, 2:06 PM IST
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த இறுதியாக 3 மாத காலம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக லோக் ஆயுக்தா அமைக்கக்கோரி பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இதில் 2019 பிப்ரவரி 1-ம் தேதிக்குள் லோக் ஆயுக்தாவை செயல்படுத்த வேண்டுமென கடந்த அக்டோபர் 24-ம் தேதி உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை என மீண்டும் முறையிடப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சீவ் கண்ணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது லோக் ஆயுக்தாவை செயல்படுத்த 3 மாதம் அவகாசம் தேவை என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், லோக் ஆயுக்தா தேடுதல் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய 8 வாரமும், உறுப்பினர்கள் தேர்வு செய்ததிலிருந்து 4 வாரக் காலத்துக்குள் லோக் ஆயுக்தா அமைப்பை இறுதி செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Also see...  வடசென்னைக்கும் வந்தாச்சு மெட்ரோ ரயில் சேவை! மக்கள் உற்சாகம்

First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...