ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோவையில் 2 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் - குற்றவாளிக்கு மரண தண்டனை உறுதி

கோவையில் 2 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் - குற்றவாளிக்கு மரண தண்டனை உறுதி

7 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து ஆற்றில் வீசியது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கோவையில் 2 குழந்தைகளை கொன்று ஆற்றில் வீசிய வழக்கில் குற்றவாளியான மனோகரனுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஞ்சித்குமார் என்ற தொழிலதிபரின் வீட்டில் வேலை பார்த்த மோகன கிருஷ்ணன் என்ற கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் மனோகரன் ஆகியோர் ரஞ்சித்குமாரின் 2 குழந்தைகளையும் கடத்தி, கடந்த 2010-ம் ஆண்டு கொலை செய்தனர்.

அதில், 7 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து ஆற்றில் வீசியது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இந்த வழக்கில் மோகன கிருஷ்ணன் போலீசாரால் என்கவுன்டரில் சுடப்பட்ட நிலையில், மனோகரனுக்கு, கோவை மகளிர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

அதற்கு எதிரான மனோகரனின் மேல் முறையீட்டு மனுவை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. அதற்கு எதிராக மனோகரன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில் மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர்.

Also see... செருப்பால் அடித்ததால் ஆத்திரம்.. பெண்ணை கொன்ற அத்தை மகன்.

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Coimbatore, Sentenced to life