ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் மேல்முறையீடு - தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் மேல்முறையீடு - தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலை
  • News18
  • Last Updated: August 31, 2020, 1:52 PM IST
  • Share this:
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் அரசாணை வெளியிட்டது. அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரியும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.

Also read... பிரசாந்த் பூசனுக்கு ₹ 1 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - கட்டத்தவறினால் 3 மாதம் சிறை



இதனை எதிர்த்து, வேதாந்த நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆலை மூடலுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும், ஆலையின் பராமரிப்பு பணிகளுக்காக இடைக்கால அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வேந்தாந்தா நிறுவனம் முன்வைத்துள்ளது.


நீதிபதி ரோகிண்டன் நாரிமன் தலைமையிலான அமர்வில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வேதாந்த நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க தமிழக அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். மேலும், விரிவான விசாரணை நான்கு வாரங்களுக்குப் பிறகு நடைபெறும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading