Home /News /tamil-nadu /

உள்ளாட்சித் தேர்தல் - அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை...!

உள்ளாட்சித் தேர்தல் - அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை...!

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

  • News18
  • Last Updated :
    உள்ளாட்சி தேர்தலை நடத்தாத தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. ஆனால், தேர்தலை நடத்த மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இதனை எதிர்த்து அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜெய் சுகின் தொடர்ந்தார். இந்த இரு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Local Body Election 2019

    அடுத்த செய்தி