Home /News /tamil-nadu /

எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை இல்லை - உச்சநீதிமன்றம்

எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை இல்லை - உச்சநீதிமன்றம்

எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

SP Velumani: எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது பல்வேறு பணிகளுக்கு, டெண்டர் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

  • News18
  • Last Updated :
    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு, தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது பல்வேறு பணிகளுக்கு, டெண்டர் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை எதிர்த்து எஸ்.பி. வேலுமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரியும், லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்ப கட்ட விசாரணையின் அறிக்கையை வழங்க உத்தரவிடுமாறும் கோரியிருந்தார்.

    மனுவை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு தீர்ப்பினை வெளியிட்டுள்ளது. அதில், போதிய ஆதாரங்கள் இன்றி மாநில அரசின் தகவல்கள் அடிப்படையில் மறு விசாரணைக்கும், ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவிட்டும், உயர்நீதிமன்றம் தவறிழைத்ததாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மாநில அரசின் போக்கிற்கு விசாரணையை விடக் கூடாது எனவும், ஆவணங்களைப் பெற வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அனைத்து தகுதியும் உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

    Also read... சென்னையில் தந்தையை கொன்று துண்டு, துண்டாக வெட்டிய மகன் - விலைக்கு இடம் வாங்கி சடலத்தை புதைத்த கொடூரம்

    எனவே, முதற்கட்ட விசாரணை அறிக்கையை வேலுமணிக்கு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேநேரம், அவருக்கு எதிரான உயர்நீதிமன்ற விசாரணையில் தாங்கள் தலையிட முடியாது என்பதால், பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை தொடர்பான விசாரணை தொடரும் என்றனர்.

    நியாயமான விசாரணையை உயர்நீதிமன்றம் செய்யும் என நம்புவதாக கூறி, எஸ்.பி. வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை முடித்து வைப்பதாகவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: SP Velumani, Supreme court

    அடுத்த செய்தி