8 வழிச்சாலையை மக்கள் விரும்பாவிட்டால் வேறு மாநிலத்திற்கு மாற்றலாமே? உச்சநீதிமன்றம் கேள்வி!

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜுலை 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

news18
Updated: July 22, 2019, 3:21 PM IST
8 வழிச்சாலையை மக்கள் விரும்பாவிட்டால் வேறு மாநிலத்திற்கு மாற்றலாமே? உச்சநீதிமன்றம் கேள்வி!
உச்ச நீதிமன்றம்
news18
Updated: July 22, 2019, 3:21 PM IST
தமிழக மக்கள் 8 வழிச்சாலை திட்டத்தை விரும்பாவிட்டால், வேறுமாநிலங்களில் அதை செயல்படுத்தலாமே? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

இந்த வழக்கு நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 8 வழிச்சாலை திட்டம் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் செயல்படுத்தப்படாது என நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது.


இதைக்கேட்ட நீதிபதி ரமணா, கருத்து கேட்பின் போது, பொதுமக்களின் கருத்துகளை முழுமையாக பதிவு செய்ய வாய்ப்பு வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளதே? என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜுலை 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Also see...

Loading...

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...