Home /News /tamil-nadu /

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்

தூத்துக்குடியில் நடந்த போராட்டம்.(கோப்புப் படம்)

தூத்துக்குடியில் நடந்த போராட்டம்.(கோப்புப் படம்)

உயர்நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளை பின்பற்ற தேவையில்லை என்றும், சுயேட்சையான விசாரணையை சிபிஐ மேற்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி கதிரேசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, சில நிபந்தனைகளுடன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் உயர்நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளை பின்பற்ற தேவையில்லை என்றும், சுயேட்சையான விசாரணையை சிபிஐ மேற்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Lok Sabha Key Constituency, Thoothukudi sterlite protest

அடுத்த செய்தி