தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு...!

உச்ச நீதிமன்றம்

இட ஒதுக்கீடு என்பது 50% தாண்டக் கூடாது என்று உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது. ஆனால் தமிழகத்தில் 69% கடை பிடிக்கப்பட்டு வருகிறது, இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு மற்றும் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இட ஒதுக்கீடு எதிராக மாணவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதி கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டது.

இட ஒதுக்கீடு என்பது 50% தாண்டக் கூடாது என்று உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது. ஆனால் தமிழகத்தில் 69% கடை பிடிக்கப்பட்டு வருகிறது, இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.
எனவே இட ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் அதுவரை 69% இடஒதுக்கீடு வழங்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Also read... Chennai Power Cut | சென்னையில் நாளை (09-02-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, "69% இட ஒதுக்கீடு விவகாரம் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று, அரசியல் சாசன பிரிவு 9ன் கீழ் சட்ட பாதுகாப்பு பெற்றுள்ளது. மராட்டிய இட ஒதுக்கீடு வழக்கில் 50% கொடுக்க வேண்டும் என கோரவில்லை, உரியவர்களுக்கு பிரிவுகள் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே ஆகும். எனவே தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு வழக்கு தனித்துவமானது, அதை பிற வழக்குடன் சேர்த்து விசாரிக்கக்கூடாது என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வரும் 17 - ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: