ஓபிசி இடஒதுக்கீடு வழக்கு - உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கக் கோரிய வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஓபிசி இடஒதுக்கீடு வழக்கு - உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி
உச்ச நீதிமன்றம்
  • Share this:
நீட் தேர்வில் போதிய கட் ஆப் மதிப்பெண் எடுத்திருந்தும் மருத்துவ பட்ட மேற்படிப்பில் இடம் கிடைக்கவில்லை என தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பாபு என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 50 சதவிகித இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாததே தனக்கு இடம் இடம் கிடைக்காமல் போனதற்குக் காரணம் என்றும், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள பட்டியலை ரத்து செய்து, இந்த ஆண்டு 50 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 27 சதவிகித இட ஒதுக்கீடு வழக்கைச் சுட்டிக்காட்டி விசாரணையை ஒத்திவைத்துள்ளதாகவும், இரண்டும் வெவ்வேறு வழக்கு என்பதால் வழக்கை ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.


அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீட்டை முறையாக 50 சதவிதிக அடிப்படையில் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குடன், மாணவர் பாபுவின் மனுவும் நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு முன்பு வசாரணைக்கு வந்தது.

Also read... 'காதுல, கழுத்துல இருக்கறத வித்து கஞ்சி குடிக்கிறோம்...' கடற்கரை வியாபாரிகளின் கண்ணீர் கதைகள்

அப்போது, மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50% இட ஒதுக்கீடு பின்பற்றப்படாததால் பல மாணவர்களுக்கான வாய்ப்புகள் பறிபோவதாகக் வாதாடினார்.மேலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குக்கும் இந்த வழக்குக்கும் வேறுபாடு இருப்பதால் சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கலாம் என உத்தரவிட்டனர்.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading