முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீண்டும் விசாரணையை தொடங்கும் ஆறுமுகசாமி ஆணையம்

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீண்டும் விசாரணையை தொடங்கும் ஆறுமுகசாமி ஆணையம்

ஆறுமுகசாமி

ஆறுமுகசாமி

ஆறுமுகசாமி ஆணைத்தில் (Arumugasamy commission) இறுதியாக, கடந்த 2019 ஜனவரி 22 ம் தேதி தம்பிதுரையிடம் விசாரணை நேரடியாக  நடைபெற்றது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஆறுமுகசாமி ஆணைத்தில் இறுதியாக, கடந்த 2019 ஜனவரி 22 ம் தேதி தம்பிதுரையிடம் விசாரணை நேரடியாக  நடைபெற்றது. மருத்துவ குழு அமைத்து விசாரணையை நடத்தவேண்டும் என்பதை ஆணையம் ஏற்று கொள்ளாததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அப்பல்லோ, உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு விசாரணையில் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதால், 36 மாதங்களாக விசாரணை நடைபெறாமலே கால நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.

11 முறையாக கொடுக்கப்பட கால அவகாசம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விசாரணையை ஆணையம் தொடங்கவுள்ளதால் மேலும் குறைந்தது 3 மாத கால அவகாசம் கேட்க வாய்ப்புள்ளது.

நீதிமன்றத்தில் 4 பேர் மட்டுமே விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்த நிலையில், விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலே உள்பட நான்கு பேருக்கு சம்மன் அனுப்ப திட்டம்.

மேலும், விசாரணை நடைபெறாமல் இருந்தால் ஆணையத்தில செயலாளர் மற்றும் சில பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். டைப்பிஸ்ட், எஸ்ஓ, நீதிபதிக்கான பாதுகாலவர் உள்பட பலரையும் மீண்டும் பணி அமர்ந்து ஆணையம் கோரவுள்ளது.

Also read... உதகையில் தொடங்கியது உறைபனி பொழிவு… கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ராஜேந்திர பாலாஜி சினிமா பாணியில் கார்களில் மாறி மாறிச் சென்று தப்பித்தார் - போலீசார் தகவல்

ஒரே வீட்டில் ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் வைத்திருந்தால் நடவடிக்கை

712 சதுர அடியில் பத்திரிக்கையாளர்கள், எய்ம்ஸ் மருத்துவ குழு உள்ளிட்டோரும் அமரும் வகையில் புதிதாக நீதிமன்ற வளாகம் அமைக்கும் பணி இறுதி நிலையை எட்டியுள்ளது.

எய்ம்ஸ் இயக்குநர் மருத்தவ குழு உறுப்பினர்களை பரிந்துரை செய்ய நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், விரைவில் குழு அமைக்கபட்டு விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Arumugasamy commission, Jayalalithaa