பட்டியலின ஊராட்சி தலைவரை கீழே அமர வைத்த விவகாரம் - ஊராட்சி செயலர் கைது, துணைத்தலைவர் தலைமறைவு

பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவி

கடலூர் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி கீழே அமர வைக்கப்பட்ட விவகாரத்தில், ஊராட்சி மன்ற செயலாளர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்

 • News18
 • Last Updated :
 • Share this:
  கடலூர் மாவட்டம் தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, பட்டியல் இனத்தை சேர்ந்தவர். ராஜேஸ்வரியை மற்ற உறுப்பினர்கள் மதிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. இதன் உச்சமாக, ஊராட்சி மன்ற கூட்டத்தின் போது பிற உறுப்பினர்கள் நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையில், ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  மேலும் சுதந்திர தினத்தன்று அவருக்கு தேசியக் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஊராட்சி செயலாளர் சிந்துஜா மற்றும் துணைத் தலைவர் மோகன்ராஜன் ஆகியோர் தேசியக் கொடியேற்றியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட துணைத்தலைவர் மோகன் ராஜா பங்கேற்கவில்லை. விசாரணையை அடுத்து, தலைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் துணைத்தலைவர் மோகன் ராஜன் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜா உள்ளிட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புவனகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.  இதனை அடுத்து, ஊராட்சி மன்ற செயலர் சிந்துஜாவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புவனகிரி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மோகன் ராஜன் தலைமறைவாக உள்ளார்
  Published by:Sankar
  First published: