ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 8 நீதிபதிகள் - கொலிஜியம் குழு ஒப்புதல்!

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 8 நீதிபதிகள் - கொலிஜியம் குழு ஒப்புதல்!

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

உச்சநீதிமன்ற கொலிஜியம் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன், லெட்சுமண சந்திரா விக்டோரியா கவுரி, பிள்ளைப்பாக்கம் பகுகுதும்பி பாலாஜி, ராமசாமி நீலகண்டன், கந்தசாமி குழந்தைவேலு ஆகிய ஐந்து வழக்கறிஞர்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கக் கோரிய பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதேபோன்று பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகிய நீதித்துறை நடுவர்களையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த 17ம் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai High court, Supreme court