பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பது தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றம் உத்தரவு

news18
Updated: August 10, 2018, 2:34 PM IST
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பது தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றம் உத்தரவு
முருகன்
news18
Updated: August 10, 2018, 2:34 PM IST
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் குண்டு வைத்து கொலை செய்யப்பட்டாா். கொலை தொடா்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனா். 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை பெற்று வரும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சாா்பில் கடந்த 4 ஆண்டுகளில் 2 முறை மத்திய அரசிற்கு பரிந்துரை கடிதம் எழுதி உள்ளது.

இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தது தொடர்பான ஆவணங்களை, இன்றைய விசாரணையின் போது மத்திய அரசு தாக்கல் செய்தது.

அதில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்களை வெளியே விடுவது ஆபத்தானது என்றும், பல்வேறு சட்டத்திட்டங்களை ஆராய்ந்து பார்த்தால் இந்த 7 பேரும் விடுதலையாக தகுதியில்லாதவர்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசு வழக்கறிஞர், பேரறிவாளன் உள்பட 7பேரை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இந்த கோாிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் மத்திய அரசு  மீண்டும் விவகாரம் தொடர்பாக பரிசீலிக்குமாறு  உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்தது.

 
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...