ஆன்லைனில் மது விற்பனை - தமிழக அரசிற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

கோப்புப் படம்.

ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்யும்படி உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் மதுவிற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

  இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மது அருந்துவோரின் எதிர்ப்பு சக்தி குறையக் கூடும் என்பதால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

  அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, நாடு முழுவதும் சாதாரண நிலைக்கு வந்து, அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு விட்டதால், இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என கோரினார்.


  இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தினர்.

  ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடர்பாக அரசு பரிசீலினை செய்யும்படி கேட்டுக் கொண்ட நீதிபதிகள், ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவிற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

  Also read... விமான கட்டணங்களை திருப்பி வழங்காத விவகாரம் - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Published by:Vinothini Aandisamy
  First published: