எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் KYC அப்டேட் செய்வது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியீடு!

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் KYC அப்டேட் செய்வது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியீடு!

எஸ்.பி.ஐ

கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, தபால் அல்லது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் ஆவணங்களின் அடிப்படையில் KYC அப்டேட் செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது," என அதன் அதிகார்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், கேஒய்சி குறித்து ஒரு முக்கியமான அப்டேட் குறித்து தெரிந்து கொள்வது அவசியம். உங்கள் KYC அப்டேட் தொடர்பாக மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI இந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முக்கியமான அறிவிப்பு எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், "பல மாநிலங்களில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, தபால் அல்லது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் ஆவணங்களின் அடிப்படையில் KYC அப்டேட் செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது," என அதன் அதிகார்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், KYC அப்டேட் செய்யும் நோக்கத்திற்காக வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட முறையில் வங்கி கிளையை பார்வையிட தேவையில்லை என்றும், மேலும் KYC புதுப்பித்தலுக்கான கால அவகாசம் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பையும் வங்கி வெளியிட்டுள்ளது.

பொதுத் துறை வங்கியான SBI, தனது வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை குறிப்பிட்ட கால அளவில் சோதனை செய்யும். அதாவது வாடிக்கையாளரின் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் கடன் நிலையைப் பொறுத்து அவர்களின் கேஒய்சி விவரங்கள் சரிபார்க்கப்படுகின்றன. குறைந்த அபாயம் கொண்ட வங்கிக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், நடுத்தர அபாயம் கொண்ட வங்கிக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு 8 ஆண்டுகளுக்கும் ஒரு முறையும், அதிக அபாயம் கொண்ட வங்கிக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் கேஒய்சி அப்டேட் செய்யப்படுகிறது.

பொதுவாக குறிப்பிட்ட கால அளவுக்குள் KYC அப்டேட் செய்யாவிட்டால் அந்த குறிப்பிட்ட வங்கி கணக்கு முடக்கப்படும். ஆனால் தற்போது கொரோனா பிரச்சினை இருப்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வாடிக்கையாளர்கள் நேரில் வங்கிக் கிளைக்குச் செல்வதும் சிரமமாக உள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, கேஒய்சி அப்டேட் செய்யத் தேவையான ஆவணங்களை தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் மே 31ம் தேதி வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதுதவிர எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களை வீட்டிலேயே தங்கி சேவைகளைப் பெறவும் அறிவுறுத்தியுள்ளது. ஒருவரின் அவசர வங்கி தேவைகளுக்கு தொடர்பு இல்லாத சேவையை வழங்குகிறது. இதற்காக வடிக்கையாளர்கள் கட்டணமில்லா எண் 1800 112 211 அல்லது 1800 425 3800 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளலாம். இதற்காக வங்கிக்கு நேரில் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.

Also read... EPF பேலன்ஸ் தெரிந்து கொள்ள கஷ்டப்படுகிறீர்களா? இதோ 4 வழிகள்!

அதேபோல, உங்கள் அன்றாட வங்கி தேவைகளுக்கு ஆன்லைன் பேங்கிங்கையும் SBI வழங்குகிறது. ஆன்லைன் பேங்கிங் மூலம், நீங்கள் நிதிகளை மாற்றலாம், டெபாசிட் கணக்குகளை உருவாக்கலாம் மற்றும் அதனை நிர்வகிக்கலாம், பில் செலுத்தலாம், வங்கி அறிக்கைகளைப் பெறலாம், ஏடிஎம் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம், காசோலை புத்தகங்களுக்கு விண்ணப்பிக்கலாம், யுபிஐ இயக்கலாம் அல்லது முடக்கலாம் மற்றும் ஆன்லைனில் வரி செலுத்தலாம் மேலும் ஏராளமான வசதிகளை உங்களுக்கு வழங்குகிறது. கூடுதல் பாதுகாப்பிற்காக OTP அடிப்படையிலான உள்நுழைவு மூலம் ஆன்லைன் வங்கி செயல்முறையை எஸ்பிஐ இன்னும் பாதுகாப்பானதாக்குகிறது. இப்போது நீங்கள் வீட்டில் இருந்தபடியே கவலையில்லாமல் வங்கிசேவைகளை பெறலாம் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

ஆன்லைன் எஸ்.பி.ஐ முற்றிலும் பாதுகாப்பான ஊடகத்தில் பரிவர்த்தனை செய்ய உங்களை அனுமதிக்கிறது. இது மிகவும் கடுமையான பாதுகாப்பு அமைப்புகளால் பாதுகாக்கப்படுகிறது என்று எஸ்.பி.ஐ தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. உங்கள் அனைத்து பரிவர்த்தனைகளும் ஒரு எஸ்எஸ்எல் மறைகுறியாக்கப்பட்ட ஊடகம் (குறைந்தபட்சம் 128-பிட் முதல் அதிகபட்சம் 256-பிட் எஸ்எஸ்எல் சுரங்கப்பாதை) வழியாக பயணிக்கின்றன. இது இணையத்தில் மிக உயர்ந்த பாதுகாப்பு என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: