ATM கொள்ளை பற்றிய புதிய தகவல்கள்.. விமானத்தில் வந்து கூகுள் மேப் பார்த்து கொள்ளையடித்தது அம்பலம்!

வங்கி ஏடிஎம் கொள்ளையர்கள்

ஏடிஎம் கொள்ளை கும்பலைச் இருவரும்  அரும்பாக்கத்தில் உள்ள சர்மா லாட்ஜியில் அறை எடுத்து தங்கி இருந்து வங்கி ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

  • Share this:
ஜூன் 15 ஆம் தேதியில் இருந்து 19ஆம் தேதி வரை எஸ்பிஐ ஏடிஎம் களில் தொடர்ந்து அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக கேஷ் டெபாசிட் மிஷின்  இருக்கும் ஏடிஎம் மையங்களில் மட்டும்  நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. சிசிடிவி காட்சிகள் மூலம் வடமாநில கும்பல் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொள்ளையடித்த கும்பல் ஹரியானா மாநிலத்திலுள்ள மேவாட் மாவட்ட கொள்ளையர்கள் என தெரியவந்தது. இதையடுத்து சென்னை காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தலைமையில் தனிப்படை ஒன்று ஹரியானாவில் முகாமிட்டு கொள்ளை கும்பலை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். முதலில் அமீர் அர்ஸ் என்ற கொள்ளையனை கைது செய்து சென்னை கொண்டு வந்து சிறையில் அடைத்த போலீசார் தற்போது அவனை 5 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர். கொள்ளையன் அமீரிடம் நடத்தி விசாரணையின் அடிப்படையில், நேற்று ஹரியானாவில் வீரேந்தர் என்ற கொள்ளையனை கைது செய்தனர்.

கொள்ளையர்கள் இருவரும் உறவினர்கள்  ஆவர். வீரேந்தருக்கு,  அமீர் அர்ஸ் மாமன் மகன் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏடிஎம் கொள்ளை கும்பலைச் இருவரும்  அரும்பாக்கத்தில் உள்ள சர்மா லாட்ஜியில் அறை எடுத்து தங்கி இருந்து வங்கி ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

வங்கி ஏடிஎம் கொள்ளையர்கள்


கூகுள் மேப் - விமானம்:

மேலும், கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்னையில் எஸ்பிஐ வங்கியின் பணம் டெபாசிட் எந்திரத்துடன் கூடிய ஏடிஎம்  எங்கெல்லாம் உள்ளது என தெரிந்து கொண்டு அதனை பட்டியலிட்டு கொள்ளையடித்துள்ளனர்.

Also Read:  நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி உட்பட 3 பேர் மீது ஆசிட் வீச்சு : கணவர் வெறிச்செயல்!!

விமானம் மூலம் சென்னை வந்து  கோடம்பாக்கம் சென்று SFS எனும் செயலி மூலமாக இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து கொள்ளைக்கு பயன்படுத்தியுள்ளனர். பின்னர், வாடகைக்கு எடுக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை வைத்துக் கொண்டு சூளைமேடு, பாண்டிபஜார், ராமாபுரம், வடபழனி, வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட இடங்களில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

மூன்று நாட்களில் இந்த இருவர் மட்டும் சுமார் 20 லட்சத்தை கொள்ளையடித்து, அவற்றை கையில் எடுத்துச் சென்றால் போலீஸ் சோதனையில் சிக்கிக் கொள்வோம் என்பதால்,  தரமணியில் உள்ள கோடாக் வங்கியில் டெபாசிட் ஏடிஎம் மூலமாக அமீரின் தாயார் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி ஹரியானாவில் இருந்து அந்த பணத்தை உடனடியாக எடுத்துள்ளனர். இவர்களிடம் இருந்து 10-க்கும் மேற்பட்ட பல்வேறு வங்கி கணக்குகளின் டெபிட் கார்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Also Read:   தேசிய வில்வித்தை போட்டிக்கு தேர்வான வீரரின் மூக்கு, வாயை துண்டாக்கிய மர்ம நபர்! - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..

இதனிடையே, கொள்ளையர்களுக்கு இருசக்கர வாகனத்தை செயலி மூலமாக வாடகைக்கு கொடுத்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலை ஹரியானாவில் இருந்து கொள்ளையன் வீரேந்தரை சென்னை கொண்டு வந்து தரமணி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பிடிபட்ட 2 கொள்ளையர்களின் 3 வங்கிக் கணக்குகளை ராயலா நகர் போலீசார் தற்போது முடக்கியுள்ளனர். அதில் ஒன்று எஸ்பிஐ வங்கி கணக்கு என்றும் தெரியவந்துள்ளது. அரியானா மாநிலம் மேவாட் மாவட்டத்திலுள்ள பால்பர்க் எனும் ஊரில் உள்ள வங்கிக் கணக்கு வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து முடக்கியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் மற்ற கொள்ளையர்களை அரியானா அதிரடிப்படை போலீசார் 50 பேர் உதவியுடன், சென்னை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒரு கொள்ளைக் கும்பலின் தலைவன்  சதகத்துல்லாகான் என்பவரை தனிப்படை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். சதக்கத்துல்லாகானை கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
Published by:Arun
First published: