ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கடலூர் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார் சவுக்கு சங்கர்

கடலூர் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார் சவுக்கு சங்கர்

சிறையில் இருந்து வெளியே வந்தார் சவுக்கு சங்கர்

சிறையில் இருந்து வெளியே வந்தார் சவுக்கு சங்கர்

எழும்பூர் நீதிமன்றம் கைது செய்யப்பட்ட 4 வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  யூட்யூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தை ஜாமீன் வழங்கபட்ட நிலையில் கடலூர் மத்திய சிறையில் இருந்து இன்று விடுதலையாகி வெளியே வந்தார்,

  சென்னை உயர்திமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன் குறித்து, அவதூறாக சமூகவலைதளத்தில் பதிவு செய்ததாக, யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் G.R.சுவாமிநாதன், B.புகழேந்தி அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

  இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நவம்பர் 11-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது  உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த சிறைத் தண்டனை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு அடுத்த முறை விசாரணைக்கு வரும்வரை வழக்கு தொடர்பாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று சவுக்கு சங்கருக்கு நிபந்தனை விதித்துள்ளது.

  இதையடுத்து சவுக்கு சங்கர்  விடுதலையாவார் என்று கருதப்பட்ட நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு காவல் துறையில் நிலுவையில் உள்ள 4 வழக்குகள் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டது. இந்த 4 வழக்குகளின் கீழ் கடந்த 11ஆம் தேதி சவுக்கு சங்கரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

  இதையும் படிங்க: அடுத்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு? அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

  இந்த நிலையில் எழும்பூர் நீதிமன்றம் கைது செய்யப்பட்ட 4 வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. அதில் சவுக்கு சங்கர் தினமும் காலை 10:30 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமூக வலைதளங்களில் எந்த கருத்துக்களையும் பதிவிட கூடாது, நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சவுக்கு சங்கர் ஆஜராக வேண்டும்.

  நீதித்துறை குறித்து எந்த கருத்துக்களையும் சவுக்கு சங்கர் தெரிவிக்கக் கூடாது, 20,000 மதிப்புள்ள பத்திரத்தில் இரண்டு நபர்கள் பிணையம் வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. என தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

  இதனையடுத்து கடலூர் மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கர் இன்று வெளியே வந்தார்.அப்போது பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் திரண்டனர். ஆனால் அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Savukku Shankar