ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

2வது நாளாக சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரத போராட்டம்..!

2வது நாளாக சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரத போராட்டம்..!

சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் போராட்டத்தில் நடத்தி வருகின்றனர்.

    நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டும்,இது தொடர்பாக சில யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்து இருந்தார் சவுக்கு சங்கர். இது தொடர்பாக, அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தனர்.

    இதையடுத்து, அவர் மதுரை சிறையில் இருந்து கடந்த 16ம் தேதி, கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 14 ஆண்டுகளாக தற்காலிக பணிநீக்கத்தில் இருந்த அவரை, பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி, லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத்துறை கடந்த 24ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் சவுக்கு சங்கரை பார்க்க அதிக பார்வையாளர்கள் வருகின்றனர்.

    Also Read:  ஓசில போகமாட்டேன் என பேருந்தில் டிக்கெட் கேட்ட பாட்டி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார்!!.

    இதனால் பார்வையாளர்கள் சவுக்கு சங்கரை பார்க்க ஒரு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், தடையை நீக்க கோரியும் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். உண்ணாவிரதம் குறித்து சிறை அதிகாரிகளுக்கு அவர் அளித்த கடிதத்தை அவர்கள் வாங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: Cuddalore central jail, Savukku Shankar