ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சவுக்கு சங்கர் மீண்டும் 4 வழக்குகளில் கைது

சவுக்கு சங்கர் மீண்டும் 4 வழக்குகளில் கைது

சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர்

சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு காவல் துறையில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகள் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், கடலூர் மத்திய சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் மீண்டும் 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.

  சென்னை உயர்திமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன் குறித்து, அவதூறாக சமூகவலைதளத்தில் பதிவு செய்ததாக, யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் G.R.சுவாமிநாதன், B.புகழேந்தி அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

  இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த சிறைத் தண்டனை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு அடுத்த முறை விசாரணைக்கு வரும்வரை வழக்கு தொடர்பாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று சவுக்கு சங்கருக்கு நிபந்தனை விதித்துள்ளது.

  இதையடுத்து சவுக்கு சங்கர் இன்று விடுதலையாவார் என்று கருதப்பட்ட நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு காவல் துறையில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகள் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

  சவுக்கு சங்கரை கைது செய்வதற்கான ஆவணங்களை கடலூர் மத்திய சிறையில் போலீசார் வழங்கினர்

  Published by:Murugesh M
  First published:

  Tags: Savukku Shankar