மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன - தலைமை தேர்தல் அதிகாரி

இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் அரசியல் கட்சியினர் புகாரளிப்பதற்கு எதுவும் இல்லை என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு திட்டவட்டமாக கூறினார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன - தலைமை தேர்தல் அதிகாரி
தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு
  • News18
  • Last Updated: October 16, 2019, 5:26 PM IST
  • Share this:
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்குநேரி தொகுதியில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக கூறப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலர்களின் பயிற்சிக்காக பயன்படுத்துபவை என்றார்.

மேலும் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் வரிசை எண்கள் குறித்த விவரங்கள் அரசியல் கட்சியினருக்கு ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளதாகவும் சத்தியபிரதா சாகு தெரிவித்தார்.


மேலும் இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் அரசியல் கட்சியினர் புகாரளிப்பதற்கு எதுவும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் பரப்புரையின் போது ராஜீவ்காந்தி மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்தார்.

Also see...
First published: October 16, 2019, 5:26 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading