பத்து வாக்கு மையங்களில் மறுவாக்குப் பதிவு! தேர்தல் ஆணையத்துக்கு சத்யபிரதா சாஹு பரிந்துரை

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றாலும், சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.

news18
Updated: April 21, 2019, 7:01 PM IST
பத்து வாக்கு மையங்களில் மறுவாக்குப் பதிவு! தேர்தல் ஆணையத்துக்கு சத்யபிரதா சாஹு பரிந்துரை
சத்ய பிரதா சாஹு
news18
Updated: April 21, 2019, 7:01 PM IST
தமிழகத்தில் 10 வாக்குப் பதிவு மையங்களில் மறு வாக்குப் பதிவு நடத்த இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹு பரிந்துரை செய்துள்ளார்.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றாலும், சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.

குறிப்பாக, சிதம்பரத்தில் பொன்பரப்பி கிராமத்தில் இரு தரப்பினரிடையே வன்முறை ஏற்பட்டது. மேலும், பல வாக்குச் சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இந்தயிலையில், தமிழகம் முழுவதுமுள்ள 10 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹு பரிந்துரை செய்துள்ளார்.

அவர், ‘தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குப் பதிவு மையங்கள், பூந்தமல்லியிலுள்ள ஒரு வாக்குப் பதிவு மையம், கடலூரிலுள்ள ஒரு வாக்குப் பதிவு மையம் என மொத்தம் பத்து வாக்குப் பதிவு மையங்களில் மறுவாக்குப் பதிவு நடத்த பரிந்துரை செய்துள்ளார். இதுதொடர்பாக, இந்தியத் தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...