தேர்தல் அறிவிப்புக்கு முன்  பிரச்சாரத்தின் செலவுகள் கணக்கில் வராது - தேர்தல் ஆணையம்!

தேர்தல் அறிவிப்புக்கு முன்  பிரச்சாரத்தின் செலவுகள் கணக்கில் வராது - தேர்தல் ஆணையம்!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு

தற்போது தேர்தலுக்கு தேவையான 90 சதவிகித EVM இயந்திரங்கள் தயாராக உள்ளதாகவும், இன்னும் 5 நாட்களில் மீதமுள்ள இயந்திரங்கள் தமிழகம் வரவிருப்பதாகவும் சத்யபிரதாசாகு தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன் நடைபெறும் பிரச்சாரத்தின் செலவுகளை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துகொள்ளாது என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சமூக நலத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் மாற்றத்திறனாளிக்கு வாகனம் மற்றும் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும், மாற்றத்திறனாளிகள் தபால் மூலம் வாக்கு அளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் 4.5 லட்சம் மாற்றத்திறனாளி வாக்காளர்கள் உள்ளதாகவும் பூத் வரை அவர்களது வாகனத்தில் சென்று வாக்களிக்கலாம் என்றும் கூறினார்.

Also read... Gold Rate: தொடர் வீழ்ச்சியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... மாலை நிலவரம் என்ன?

தற்போது தேர்தலுக்கு தேவையான 90 சதவிகித EVM இயந்திரங்கள் தயாராக உள்ளதாகவும், இன்னும் 5 நாட்களில் மீதமுள்ள இயந்திரங்கள் தமிழகம் வரவிருப்பதாகவும் தெரிவித்தார்.
தேர்தல் அறிவிப்புக்கு முன் நடைபெறும் பிரச்சாரத்தின் செலவுகளை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துகொள்ளாது என்றும், இணைய வழி மூலம் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் கண்காணிக்கும் என்றும் தெரிவித்தார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: