கருணாநிதி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு 15 நாள் சிறை

சாட்டை துரைமுருகன்

கருணாநிதியை மற்ற குழந்தைகளுடன் இணைத்தும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பூவை இணைத்தும் தவறான கருத்துக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

 • Share this:
  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து இணையதளத்தில் அவதூறு வீடியோ வெளியிட்ட சாட்டை  துரைமுருகனுக்கு திருவிடைமருதூர் நீதிமன்றம் 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கியதை அடுத்து அவர் லால்குடியில் உள்ள கிளை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

  தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து இணையதளத்தில் அவதூறு பரப்பிய சாட்டை முருகன் என்கின்ற துரைமுருகன் பாண்டியன் மீது கடந்த ஜூன் 11-ம் தேதி அன்று திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  Also Read : ஆபசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்த யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா கைது

  இதில் கருணாநிதியை மற்ற குழந்தைகளுடன் இணைத்தும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பூவை இணைத்தும் தவறான கருத்துக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதனை கண்ட நான் அதிர்ச்சி அடைந்தேன் என்று வழக்கறிஞர் ராஜசேகர் புகார் அளித்தார். அதனடிப்படையில் துரைமுருகன் பாண்டியன் மீது கழகத்தை தூண்டிவிடுதல், அமைதிக்கு சீர் குலைத்தல், உள்ளிட்ட 4 பிரிவுகளின் மீது அவர் மீது வழக்கு போடப்பட்டது.

  இந்நிலையில் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் நீதிபதி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி நிலவரசன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் துரைமுருகன் பாண்டியனுக்கு நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கியதை அடுத்து துரைமுருகன் பாண்டியன் லால்குடி கிளை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். துரைமுருகன் பாண்டியன் வருவதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிரருந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: