முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “திமுகவின் பெண் சிங்கம் சத்தியவாணி முத்து...” முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்!

“திமுகவின் பெண் சிங்கம் சத்தியவாணி முத்து...” முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

திராவிட மாடல் ஆட்சியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முதலமைச்சர் முக ஸ்டாலின் பின்னால் மகளிர் ஒன்றாக நிற்க வேண்டும் - கனிமொழி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

அரசியலுக்கு வரும் பெண்களுக்கு சத்தியவாணிமுத்து ஒரு பாடம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் சத்தியவாணிமுத்துவின் நூற்றாண்டு விழா சென்னை அடையாறு முத்தமிழ் மன்றத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய முதலமைசர் மு.க.ஸ்டாலின், திமுகவின் பெண் சிங்கமாக வாழ்ந்து காட்டியவர் சத்தியவாணிமுத்து. போராட்டக்குணம் மற்றும் தியாக உணர்வுடன் இறுதி மூச்சுவரை வாழ்ந்தார். சத்யவாணி முத்து போன்ற மகளிரால் தான் இன்று பல மகளிர் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர்.  விரல்விட்டு எண்ண கூடிய அளவிலே அன்று பெண்கள் அரசியலுக்கு வந்தனர்” என கூறினார்.

முன்னதாக பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் துரை முருகன், “ இன்னும் கொஞ்சம் நாளில் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை கொடுக்க போகிறோம். திமுகவில் என்னை உறுப்பினர் ஆக்கியதே சத்தியவாணிமுத்து அம்மையார் தான். அவரின் கைராசியே நான் இந்த அளவிற்கு வளர காரணம்” என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, “சிக்கல், அவமானங்களை கடந்து ஒவ்வொரு நாளும் போராட்டமாகதான் பொது வாழ்க்கையை பெண்கள் சந்தித்து வருகிறோம். ஆனால் அந்த காலத்திலேயே நிறைமாத கர்ப்பிணியாக சிறைக்கு சென்று பெரியாரின் கொள்கையை இறுதி மூச்சு வரை விடாதவர் சத்தியவாணி முத்து அம்மையார். திராவிட மாடல் ஆட்சியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முதலமைச்சர் முக ஸ்டாலின் பின்னால் மகளிர் ஒன்றாக நிற்க வேண்டும்” என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சத்தியவாணி முத்து அவர்களின் குடும்பத்தினர் மற்றும் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: CM MK Stalin, Durai murugan, Kanimozhi