வாக்கு எண்ணும் மையத்தில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம் - சத்யபிரதா சாகு தகவல்!

தேனியில் முகவர்களை அனுமதிப்பதில்லை என அமமுகவின் தங்கதமிழ்ச்செல்வன் புகார் கூறியிருப்பதாக தெரிவித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  வாக்கு எண்ணும் மையத்தில் அரசியல் கட்சி முகவர்கள் 24 மணி நேரமும் இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

வாக்கு எண்ணும் மையத்தில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம் - சத்யபிரதா சாகு தகவல்!
சத்ய பிரதா சாகு
  • News18
  • Last Updated: April 22, 2019, 3:07 PM IST
  • Share this:
வாக்கு எண்ணும் மையத்தில் 24 மணி நேரமும் அரசியல் முகவர்கள் இருக்கலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, 4 தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வரும் 26ம் தேதி 13 துணை ராணுவ ராணுவப்படை தமிழகம் வரவுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், இடைத்தேர்தல் நடக்கும் 4 தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனை தொடரும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்த அவர், ஏற்கெனவே உள்ள நடைமுறையை பின்பற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


தேனியில் முகவர்களை அனுமதிப்பதில்லை என அமமுகவின் தங்கதமிழ்ச்செல்வன் புகார் கூறியிருப்பதாக தெரிவித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
வாக்கு எண்ணும் மையத்தில் அரசியல் கட்சி முகவர்கள் 24 மணி நேரமும் இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

Also see...

First published: April 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading