முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பணம் பறிமுதல் செய்யப்பட்ட தொகுதிகளில் தேர்தல் ரத்து தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவுசெய்யும் - சத்யபிரதா சாகு

பணம் பறிமுதல் செய்யப்பட்ட தொகுதிகளில் தேர்தல் ரத்து தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவுசெய்யும் - சத்யபிரதா சாகு

சத்ய பிரதா சாகு

சத்ய பிரதா சாகு

பணம் பறிமுதல் செய்யப்பட்ட தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்வது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘நாளை ஒரே கட்டமாக தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இறுதி ஒரு மணி நேரம் பாதுகாப்பாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்கை 6,28,69,955. மொத்த வாக்குச்சாவடிகள்- 88,937. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் எண்ணிக்கை 4,17,521. பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளவர்கள் எண்ணிக்கை 1,58,263. 537 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. 10,813 பதற்றமான வாக்குச்சாவடிகள்.

நேற்று 3 மணி வரையில் 428.46 கோடி மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கண்குறைபாடு உள்ளவர்களுக்கு, 3,538 பிரைலி வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இம்முறை அதிகம் வாக்குச்சாவடிகள் உள்ளன. எனவே வாக்காளர்கள் எந்த வாக்குச்சாவடி என தெரிந்து கொள்ள

1950 போன் செய்து கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இன்று மாலைக்குள் அனைவருக்கும் பூத் சிலிப் வழங்கப்படும். பூத் சிலிப் இல்லையென்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்காளர்கள் வாக்களிக்கலாம். 3,391 சிவிஜில் ஆப் மூலம் புகார் வந்துள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குகள் விநியோகிக்கப்பட்ட எண்ணிக்கை 1,04,282. அதில் திருப்ப பெற்றப்பட்டவை 1,03,202 ஆகும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்ட தபால் வாக்குகள் 28,531. திரும்ப பெறப்பட்டவை 28,159 ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட தபால் வாக்குகள் 30. திரும்ப பெறப்பட்டவை 28 ஆகும். இன்று மாலை 5 மணி வரை வாக்குகள் பெறப்படும். பணம் பறிமுதல் செய்யப்பட்ட தொகுதிகளில் தேர்தல் ரத்து தொடர்பான முடிவை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும்’ என்று தெரிவித்தார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Sathya pratha sahoo, TN Assembly Election 2021