சாத்தான்குளம் காவல்நிலையம் போலீசாரிடம் ஒப்படைப்பு: அரசியல் தலையீடு இல்லை என சிபிசிஐடி திட்டவட்டம்

தூத்துக்குடி குற்றவியல் நீதிபதி ஹேமா முன்னிலையில் தலைமை காவலர் ரேவதி இன்று நேரில் ஆஜரானார். அத்துடன் சாத்தான்குளம் காவல்நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சாத்தான்குளம் காவல்நிலையம் போலீசாரிடம் ஒப்படைப்பு: அரசியல் தலையீடு இல்லை என சிபிசிஐடி திட்டவட்டம்
சாத்தான்குளம் காவல்நிலையம்
  • Share this:
தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக நேர்மையாகவும், நடுநிலையுடனும் விசாரணை நடைபெற்றுவதாகக் கூறியுள்ள சிபிசிஐடி ஐஜி சங்கர், இந்த வழக்கில் அரசியல் தலையீடு எதுவும் கிடையாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரிக்கவும், வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையத்தை கொண்டுவரவும் உத்தரவிட்டது.

இதனடிப்படையில், சாத்தான்குளம் காவல்நிலையம் கடந்த மூன்று நாட்களாக வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் நேரில் ஆஜராகி சாத்தான்குளம் காவல்நிலையத்தை போலீசாரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று முறையிட்டார்.


சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தடயவியல் துறையினர் தேவையான ஆதாரங்களை சேகரித்து விட்டதாகவும், சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையேற்றுக் கொண்ட நீதிபதிகள், சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து உத்தரவிட்டனர்.

இதனிடையே, தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி சங்கர், தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவத்தில் தலைமறைவாக உள்ள காவலர் முத்துராஜாவை தேடி வருவதாகவும், அவரை விரைவில் கைது செய்வோம் என்றும் உறுதியளித்தார். இந்த வழக்கு தொடர்பாக 12 குழுக்கள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க...

சாத்தான்குளம் வழக்கு: சினிமா பாணியில் சிபிசிஐடி அதிரடி - கொண்டாடிய பொதுமக்கள்

மேலும் தூத்துக்குடி குற்றவியல் நீதிபதி ஹேமா முன்னிலையில் தலைமை காவலர் ரேவதி இன்று நேரில் ஆஜரானார். அப்போது சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜூன் 19ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக தான் நேரில் கண்டதை அவர் வாக்குமூலம் அளித்தார்.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading