சாத்தான்குளம் கொலை வழக்கு: 18 ரத்த மாதிரிகள்.. சிக்கிய சிசிடிவி காட்சிகள்..

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை மரண வழக்கில், சிபிஐ-இன் விசாரணை வேகம் எடுத்துள்ளது. விசாரணையின் கோணம் என்ன?

சாத்தான்குளம் கொலை வழக்கு: 18 ரத்த மாதிரிகள்.. சிக்கிய சிசிடிவி காட்சிகள்..
உயிரிழந்த தந்தை மகன்
  • Share this:
தந்தை-மகன் மரண வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது இரண்டு கொலை வழக்குகள் பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தினர்.

தாங்கள் நடத்திய விசாரணை குறித்து மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்தனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் கடைப்பகுதி மற்றும் சாத்தான்குளம் மருத்துவமனையில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிப் பதிவுகளையும் சிபிசிஐடி போலீசார் சமர்ப்பித்துள்ளனர்.


சித்திரவதை நடந்த சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பதிவான சிசிடிவியின் காட்சிகள் கிடைக்கவில்லை என்றும், காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்நிலையம், லத்தி மற்றும் கைதி அறை என 18 இடங்களில் ரத்தக்கறைகள் இருந்ததை ஆதாரப்பூர்வமாக கண்டுபிடித்துள்ளதாக சிபிசிஐடியின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

3 கைலிகள், 7 உள்ளாடைகள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட லத்திகள் உள்ளிட்ட தடயங்களையும் நீதிமன்றத்தில் போலீசார் சமர்ப்பித்துள்ளனர். இந்த நிலையில், டெல்லியிலிருந்து வந்திறங்கிய சிபிஐ ஏ.எஸ்.பி சுக்லா தலைமையிலான குழுவினர் களமிறங்கி விசாரணையை இன்னும் வேகப்படுத்தியுள்ளனர்.

சிபிஐ கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்குமா?சிபிஐ ஏஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகள் சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வீட்டில் விசாரணையை தொடங்கினர்.

ஜெயராஜுன் மனைவி செல்வராணி, மகள்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என 10 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

கோவில்பட்டி கிளை சிறைக்கு அழைத்துச் செல்லும் முன் நலமுடன் இருப்பதாக சான்று அளித்த சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அரசு மருத்துவமனை முழுவதையும் சிபிஐ போலீசார் தாங்கள் கொண்டு வந்த கேமராவில் வீடியோ பதிவு செய்து கொண்டனர்.

அரசு மருத்துவர் ஆத்திகுமாரிடம் விசாரணை நடத்திய சிபிஐ குழு, சித்திரவதை நடந்த சாத்தான்குளம் காவல் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டனர்.

மற்றொரு குழுவினர் வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் சாட்சியங்களின் வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

தந்தை மகன் மரண வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள 10 போலீசாருக்கு எதிராக கொலை, சட்டவிரோத கைது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு அவர்களை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்த போலீசார்கள் தான் காரணம் என்ற நோக்கில் விசாரணை வியூகத்தை சிபிஐ அதிகாரிகள் வகுத்துள்ளார்கள்.

அத்துடன், தந்தை மகன் இருவரும் சிறையில் அடைப்பதற்கு முன்பும், சிறையில் அடைத்த பின்பும் என்ன நடந்தது என்பது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

பிரேத பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் என்ன சொல்லப்படுகிறது? சிகிச்சை கொடுத்த மருத்துவர்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே சிபிஐ விசாரணையில் அடுத்த நகர்வை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 போலீசாரை காவலில் எடுத்து விசாரணை செய்ய சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்  படிக்க...

.தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு

அதேபோல், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அல்லது தன்னார்வ இளைஞர்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்பதையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை பட்டியலில் சேர்த்துள்ளது.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading