சாத்தான்குளம் வழக்கு : காவலர் ரேவதியை அடுத்து சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவத்தில் காவலர் ரேவதியை அடுத்து மற்றொரு காவல் அதிகாரியும் சாட்சியாக மாறி உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

சாத்தான்குளம் வழக்கு : காவலர் ரேவதியை அடுத்து சாட்சியாக மாறிய மற்றொரு போலீஸ் அதிகாரி
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்
  • Share this:
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 4 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்ட்டார். இதையடுத்து எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் தலைமறைவாக இருந்தனர். இவர்களை தீவிரமாக தேடிவந்த சிபிசிஐடி போலீசார் நள்ளிரவில் இவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.



இந்நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிவில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார். சாத்தான் வழக்கில் 5 காவலர்களை இதுவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய முக்கிய காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை சிபிசிஐடி சாட்சியாகிறார் என சிபிசிஐடி தெரிவித்துள்ளனர்.  காவலர் ரேவதி காவல்துறைக்கு எதிராக சாட்சி அளித்த நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரையும் சாட்சியாக மாறியுள்ளார்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading