ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர்களின் உடலில் காயம் இருந்ததாக, சிகிச்சை அளித்த மருத்துவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்கிற்கு கடைசிநேரத்தில் சிகிச்சை அளித்த மருத்துவர் பாலசுப்பிரமணியனுடன், நமது கோவில்பட்டி செய்தியாளர் மகேஸ்வரன் தொலைபேசி மூலமாக சில முக்கிய தகவல்களை பெற்றுள்ளார். அதன்மூலம் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
கூடுதல் நேரம் கடை திறந்திருந்த தகராறில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தையும், மகனும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். சாத்தான்குளம் போலீசார் தாக்கியதாலேயே இருவரும் உயிரிழந்ததாக உறவினர்கள், வியாபாரிகள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.