சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு - இரட்டைக்கொலை வழக்குகளாக பதிவு

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பை இரண்டு கொலை வழக்குகளாக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு - இரட்டைக்கொலை வழக்குகளாக பதிவு
சாத்தான்குளம் காவல்நிலையம்
  • Share this:
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 4 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் வழக்கில் தொடர்புடையதாக காவல் ஆய்வாரள் ஸ்ரீதார், எஸ்.ஐ. ரகு கணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் உள்ளிட்ட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரத்தை இரட்டை கொலை வழக்காக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் அடுத்தடுத்த நாட்களில் இறந்ததால் தனித்தனியே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


சிபிசிஐடி போலீசார் நேற்று கொலை வழக்காக பதிவு செய்த நிலையில் தற்போது இரட்டை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். தந்தை வயதானாவர், மகனுக்கு 31 வயது என்பதால் இருவருக்கும் கொடுக்கப்பட்ட சிகிச்சை, உடல்நிலை குறித்த அனைத்து ஆதராங்களையும் சிபிசிஐடி போலீசார் திரட்டி வருகின்றனர்.

இதனிடையே இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிபிசிஐடி போலீசாரின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் வாக்குமூலம் கொடுத்த தலைமை பெண் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading