நடிகர் ரஜினிகாந்த் சொன்ன கருத்து எங்களுக்கு உடன்பாடுதான் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சொன்ன கருத்தில் தங்களுக்கு உடன்பாடுதான் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சொன்ன கருத்து எங்களுக்கு உடன்பாடுதான் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • Share this:
சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் காவல் நிலையக் கொலை செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துரைத்திருந்தார். அந்தப் பதிவில், ”சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது” எனக் கூறியிருந்தார்.

சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரில் உள்ள கொரோனா நுண் களப் பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தது போல, நிச்சயமாக நாங்கள் விடமாட்டோம்; என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை தமிழக அரசு முழுமையாக எடுத்து வருகிறது என்றார்.

Also see:இது தொடர்பாக மேலும் கூறுகையில், நீதிமன்றம் சொல்வதைப் போல நடந்து வருகிறோம். குற்றவாளி யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். ரஜினிகாந்த் சொன்ன கருத்து எங்களுக்கு உடன்பாடுதான் என்று தெரிவித்தார். மேலும், கொரோனா தொற்றில் இருந்து நலமானவர்களையும் சேர்த்து அதிக தொற்று இருப்பது போல ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருவது நியாயமில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
First published: July 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading