சாத்தான்குளம் தந்தை & மகன் உயிரிழப்பு - ராகுல் காந்தி கடும் கண்டனம்

பாதுகாவலர்களே ஒடுக்குமுறையாளர்களாக மாறுவது சோகமாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் தந்தை & மகன் உயிரிழப்பு - ராகுல் காந்தி கடும் கண்டனம்
ராகுல் காந்தி
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ் விசாரணையை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மரணம் அடைந்தனர்.

அவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் ஜெயராஜ் - பெனிக்ஸ் குடும்பத்துக்கு 20 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டது.

இதனிடையே ஜெயராஜ் & பெனிக்ஸ் மரணத்திற்கு ட்விட்டரில் பிரபலங்கள் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர்,


  

காவல்துறையினர் மிருகத்தனமாக நடந்து கொள்வது கொடூரமான குற்றம். நமது பாதுகாவலர்கள் ஒடுக்குமுறையாளர்களாக மாறுவது சோகமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading