• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை - பென்னிக்ஸின் தாயாரிடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை - பென்னிக்ஸின் தாயாரிடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு

பென்னிக்ஸின் தாயாரிடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு

பென்னிக்ஸின் தாயாரிடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், பென்னிக்ஸின் தயாருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

  • Share this:
    சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி இரவு ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகளை திறந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. ஏற்கனவே சிறைச்சாலை, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில், ஏடிஎஸ்பி சுக்லா தலைமையிலான அதிகாரிகள், செல்வராணியை நெல்லை அரசு மருத்துமனைக்கு அழைத்துச்சென்று ரத்த மாதிரி எடுப்பதற்காக அழைத்துச்சென்றனர்.

    ALSO READ |  சித்தர்கள் மற்றும் சாமியாடிகளின் மீது அதீத நம்பிக்கை - உயிரிழந்த தந்தையின் உடலை வீட்டிலேயே அடக்கம் செய்த மகன்



    சுமார் ஒரு மணி நேரத்திற்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பிறகு சிபிஐ அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: