”கொலை வழக்கு பதிவு செய்யுங்கள்” - சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம்: கோவில்பட்டியில் இன்று கடைகள் அடைப்பு...

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் இன்று முழு கடைகள் அடைப்பு நடத்தப்படுகிறது.

”கொலை வழக்கு பதிவு செய்யுங்கள்” - சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம்: கோவில்பட்டியில் இன்று கடைகள் அடைப்பு...
உயிரிழந்த தந்தை மகன்.
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.இந்த இருவரின் மரணத்திற்கு காவல்துறையினர் தான் காரணம் என்று கூறி காவல்துறையை கண்டித்து, உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல் ‌கட்சியினர் மற்றும் வணிகர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இருவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பகுதியில் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

மேலும் படிக்க...ஆன்லைன் கல்வி: தேவையற்ற வீடியோக்கள் வந்தால் காவல் நிலையத்தில் புகார் செய்யவேண்டும்: மத்திய அரசு


தற்காலிக தினசரி காய்கறி சந்தையை தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பஸ் நிலையம், மெயின் ரோடு, ‌ தெற்கு பஜார், கடலையூர் சாலை, பசுவந்தனை சாலை என முக்கிய பகுதியில் உள்ள பலசரக்கு கடைகள், ‌ நகைக்கடைகள், ‌மெடிக்கல்ஸ்,‌ பேக்கரிகள் என அனைத்து நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் நகரின் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading