சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது
முத்துராஜ்
  • Share this:
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து வழக்கில் தொடர்புடைய காவலர் முத்துராஜுக்கு, வலைவீசிய சிபிசிஐடி போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். விளாத்திகுளத்தை அடுத்த கீழமங்களம் என்னுமிடத்தில் முத்துராஜின் இரு சக்கரவாகனம் மட்டும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் வழக்கறிஞர் ஒருவருடன் செல்போனில் பேசியது தெரியவந்தது.மேலும் படிக்க...

நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கான தேதியை அறிவித்தது மத்திய அரசு..

இதையடுத்து செல்போன் சிக்னல் மூலம் தேடிய சிபிசிஐடி போலீசார், பூசனூர் கிராமத்தில் காவலர் முத்துராஜ் பதுங்கிருப்பதை அறிந்து கைது செய்தனர். இதன் பின்னர் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திற்கு முத்துராஜை அழைத்து சென்று போலீசார் விசாரணையை தொடங்கினர்.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading