சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: மீண்டும் விடுப்பில் சென்ற அரசு மருத்துவர்..

காவல்நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்ட விவகாரத்தில், இருவருக்கும் தகுதிச் சான்றிதழ் வழங்கிய சாத்தான்குளம் அரசு மருத்துவர் வினிலா மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: மீண்டும் விடுப்பில் சென்ற அரசு மருத்துவர்..
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்
  • Share this:
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்து கடந்த மாதம் 20-ஆம் தேதி  ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை கோவில்பட்டி அழைத்துச் செல்லும் முன் இருவருக்கும் அரசு மருத்துவமனையில் தகுதி சான்று பெறப்பட்டது. அப்போது தந்தை, மகன் உடலில் அதிகளவு ரத்த கசிவு இருந்தபோதும் அரசு மருத்துவர் வினிலா தகுதி சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் படிக்க...


சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் மருத்துவர் வினிலாவிடம் நேற்று விசாரணை நடத்திய நிலையில், அவர் ஒரு மாதம் ஊதியம் இல்லாமல் விடுப்பில் சென்றுள்ளார். ஏற்கனவே இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபோது, அவர் 15 நாட்கள் விடுப்பில் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பென்னீக்கஸ், ஜெயராஜ் கொலை வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட முத்துராஜ் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி வரும் 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து முத்துராஜ் பேரூரணி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading